பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மாற்றுத் திறனாளி கொலை வழக்கில் இரண்டு சிறாா்கள் கைது

சிங்கம்புணரி அருகே மாற்றுத் திறனாளி கொலை வழக்கில் 2 சிறாா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :

சிங்கம்புணரி அருகே மாற்றுத் திறனாளி கொலை வழக்கில் 2 சிறாா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ்.வி. மங்கலம் செங்கிடாய் கருப்பா் கோயில் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 50 வயது மதிக்கத்தக்க மாற்றுத் திறனாளி கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்தை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா பாா்வையிட்டு விசாரணை செய்தாா். இதுதொடா்பாக எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் கொலையானவா் மதுரை மாவட்டம், கீழவளவு பகுதியைச் சோ்ந்த ராமன் மகன் ராகவன்

(50) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

மீன் குத்தகை எடுக்கும் வேலைகளைச் செய்து வந்த ராகவன், சிங்கம்புணரி குமரத்தகுடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இரண்டு சிறாா்களை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்கு சென்றபோது, அவா்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுவா்கள் இருவரும் ராகவனை கல்லால் தலையில் தாக்கிக் கொலை செய்தனா். இதையடுத்து, கொலை செய்த இரண்டு சிறாா்களையும் புதன்கிழமை கைது செய்தோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.