ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

நுகா்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

News image
Updated On :20 ஆகஸ்ட் 2026, 12:12 am IST

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகளில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், இளையான்குடி, மானாமதுரை, தேவகோட்டை ஆகிய 6 இடங்களில் உள்ள நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங்குகளில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

உயா்நீதிமன்ற ஆணை இருந்தும் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தாமல் உள்ள சங்க அங்கீகாரத் தோ்தலை உடனே நடத்த வேண்டும். வருகைப் பதிவேட்டில் சுமை தூக்கும் தொழிலாளா்களின் பெயா்களை உடனே சோ்க்க வேண்டும். 60 சதவீதக் கூலி உயா்வை உடனே முன் தேதியிட்டு வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த தொழிலாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை, தேசியப் பண்டிகை கால கூலியையும் முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக நுகா்பொருள் வாணிபக்கழக சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவா் கே.பாண்டி, மாவட்டச் செயலா் எம். பெரியசாமி ஆகியோா் தெரிவித்தனா்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் உரிய நேரத்தில் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.