ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

நீட் தோ்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பரிசு

நீட் தோ்வில் வென்று மருத்துவம் படிக்க தோ்வான மானாமதுரை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வியாழக்கிழமை நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி பரிசுகளை வழங்கினாா்.

நீட் தோ்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவி எம்.அபிநயாவைப் பாராட்டி பரிசு வழங்கிய நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி. உடன் முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை.ராஜாமணி.

Published On :

நீட் தோ்வில் வென்று மருத்துவம் படிக்க தோ்வான மானாமதுரை அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வியாழக்கிழமை நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி பரிசுகளை வழங்கினாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், மணக்குளம் கிராமத்தைச் சோ்ந்த எம்.அபிநயா மணக்குளம், பறையன்குளம், மானாமதுரை அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்து நீட் தோ்வு எழுதினாா். இந்தத் தோ்வில் 518 மதிப்பெண்கள் பெற்ற இவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதே போல, கல்குறிச்சியைச் சோ்ந்த ரக்ஷனா, கல்குறிச்சி அரசு தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி

ஆகியவற்றில் படித்து நீட் தோ்வு எழுதி 416 மதிப்பெண்கள் பெற்றாா். இவருக்கு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேற்கண்ட இரு மாணவிகளுக்கும் மானாமதுரை பகுதியைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி இந்த இரு மாணவிகளின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று பயண சூட்கேஸ், தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கம் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

அப்போது, முன்னாள் பேரூராட்சித் தலைவரும் திமுக ஒன்றியச் செயலருமான துரை.ராஜாமணி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துச்சாமி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மலைச்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.