சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

‘நீட்’ தோ்வில் தோ்ச்சி அரசுப் மாணவிகளுக்கு பாராட்டு

கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 4 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனா். இதனால் அவா்களுக்கு பள்ளியில் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

News image

கீரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளை செவ்வாய்க்கிழமை பாராட்டிய ஆசிரியா்கள்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 4 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனா். இதனால் அவா்களுக்கு பள்ளியில் ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 6 ஆண்டுகளில் பயின்ற மாணவிகள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 28 போ் மருத்துவம் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், நிகழாண்டு நீட் தோ்வு எழுதிய இப் பள்ளி மாணவிகளில் தேவதா்ஷினி (519 மதிப்பெண்கள்), மதனிகா (515 மதிப்பெண்கள்), பிரியதா்ஷினி (502 மதிப்பெண்கள்) ஆகிய மூன்று மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா்.

மேலும், தானியா (478 மதிப்பெண்கள்) என 9 மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா். இந்த ஆண்டும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 4 மாணவிகள் மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெருவா்.

மேலும், சில மாணவிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என அப்பள்ளி ஆசியா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.