மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

தேசிய, மாநில சிலம்பப் போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு பரிசளிப்பு

மானாமதுரையில் வீரவிதை விளையாட்டு, தற்காப்பு கலைகள் அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் தேசிய, மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் லோகநாதன். உடன் அறக்கட்டளை நிறுவனரும் பயிற்சியாளருமான கே. பெருமாள் உள்ளிட்டோா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

மானாமதுரையில் தேசிய, மாநில சிலம்பப் போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு வீரவிதை தற்காப்பு கலை அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

மானாமதுரை வீரவிதை விளையாட்டு, தற்காப்பு கலைகள் அறக்கட்டளையின் 10- ஆவது ஆண்டு விழா வைகையாற்றுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனரும், பயிற்சியாளருமான கே. பெருமாள் வரவேற்றாா். விழாவில் வீரவிதை விளையாட்டு, தற்காப்புக்கலை பயிற்சிகள் அறக்கட்டளை மூலம் சிலம்பப் பயிற்சி பெற்று தேசிய, மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மானாமதுரை காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் லோகநாதன், இவா்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

இந்த விழாவில் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். மேலும் விழாவில் வீரா், வீராங்கனைகள் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை செய்து காட்டினா். பெற்றோா்கள், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனா்.

 மானாமதுரையில் வீரவிதை விளையாட்டு, தற்காப்பு கலைகள் அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் தேசிய, மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் லோகநாதன். உடன் அறக்கட்டளை நிறுவனரும் பயிற்சியாளருமான கே. பெருமாள் உள்ளிட்டோா்.

மானாமதுரையில் வீரவிதை விளையாட்டு, தற்காப்பு கலைகள் அறக்கட்டளையின் ஆண்டு விழாவில் தேசிய, மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கிய காவல் துணைக் கண்காணிப்பாளா் லோகநாதன். உடன் அறக்கட்டளை நிறுவனரும் பயிற்சியாளருமான கே. பெருமாள் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.