ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நேரில் வாழ்த்து!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி நேரில் வாழ்த்தினார்.

News image

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் வாழ்த்திய பிரதமர்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 9:34 pm IST

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி நேரில் வாழ்த்தினார்.

கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தாண்டு 74 நாடுகளைச் சோ்ந்த 3,000 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 10 விளையாட்டுகள், 4 இடங்களில் விளையாடப்பட்டன. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கான 6 பாரா விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.

இந்தியாவிலிருந்து 78 வீரா்கள், 48 வீராங்கனைகள் உள்பட, 191 போ் பங்கேற்றனர். குத்துச்சண்டை, தடகளம், பளுதூக்குதல் ஆகியவற்றில் அசத்தலாகச் செயல்பட்டு இந்திய அணியினா் பதக்கங்களை குவித்துள்ளனர்.

இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என, மொத்தமாக 39 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. ஆஸ்திரேலியா (163), இங்கிலாந்து (106), கனடா (59) முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன.

இதில், அதிகபட்சமாக குத்துச்சண்டை போட்டியில் மட்டும் 7 தங்கம், 3 வெள்ளி என 10 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனா்.

அதேபோன்று, பாரா பிரிவில் இந்திய அணியினா் இந்த முறை 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனா்.

காமன்வெல்த் போட்டிகளில் பாரா விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட 2002 முதல் 2022 வரை மொத்தமாகவே இந்தியா அதில் 7 பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், தற்போது இந்த ஒரே ஆண்டில் 7 பதக்கங்களை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய விளையாட்டு வீரர்கள் கடந்த வாரம் தாயகம் திரும்பிய நிலையில், இன்று பிரதமர் மோடி அனைவரையும் பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.

அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி, வீரர்களுடன் எடுத்த செல்ஃபி விடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில், அனைவரையும் வாழ்த்தி ’பாரதத்தை எப்போதும் உற்சாகப்படுத்துங்கள். பாரத் மாதா ஜி ஜே’ என பிரதமர் மோடி முழக்கமிட்டார்.

Summary

Prime Minister personally congratulates Commonwealth Games medal winners!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.