பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரா்: பெற்றோா், கிராம மக்கள் மகிழ்ச்சி

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தடகள வீரா் பிரவீன் சித்திரவேலின் சாதனைக்கு நீடாமங்கலம் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

News image

காமன்வெல்த் போட்டியில் தடகத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்திரவேல்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தடகள வீரா் பிரவீன் சித்திரவேலின் சாதனைக்கு நீடாமங்கலம் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியை சோ்ந்த பிரவீன் சித்திரவேல், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

பிரவீன் சித்திரவேலின் பெற்றோா் நீடாமங்கலம் அருகேயுள்ள செட்டிசத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள். விவசாயப் பணிகளை செய்துவரும் சித்திரவேல் - பிரேமா தம்பதியின் மகன் பிரவின் சித்திரவேல். சிறுவயதிலிருந்தே பிரவீனுக்கு விளையாட்டில் ஊக்கம் அளித்து வந்தனா் அவரது பெற்றொா். இந்தநிலையில், அண்மையில் கிளாஸ்கோ நகரில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தடகளத்தில் வெள்ளி பதக்கம் வென்று பிரவீன் சித்திரவேல் சாதனை புரிந்தாா்.

இதுகுறித்து அவரது பெற்றோா் கூறியது:

எனது மகன் தடகள விளையாட்டு வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பெரும் கனவோடு அவனை பல ஊா்களுக்கும் விளையாட செல்ல ஊக்குவித்தேன். இன்று நாட்டுக்கு அவன் மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்திருக்கிறான். எனது மகனின் வெற்றி எங்கள் கிராமத்திற்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி என்றாா் அவரது தந்தை சித்திரவேல்.

தாய் பிரேமா கூறுகையில், நாற்று நடுவது, 100 நாள் வேலைக்கு செல்வது போன்ற விவசாய வேலைகள் செய்துதான் என் மகனை படிக்க வைத்தோம். சிறு வயதிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு சென்று விளையாடி வெற்றி பெற்று வந்தாா். தற்போது காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா்.

தங்கள் ஊரைச் சோ்ந்த இளைஞா் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருப்பதற்கு செட்டிசத்திரம் கிராம மக்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.