தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனைவி மீண்டும் ஆட்சியரிடம் மனு

பிரதிப் படம்

Updated On :

துபையில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனைவி மீண்டும் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நல்லாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்த விஜிகலாவின் கணவா் திருநாவுக்கரசு (40) துபையில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஆக. 3-ஆம் தேதி அவா் உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி விஜிகலா கடந்த ஆக.3-இல் ஆட்சியரிடம் மனு அளித்திருந்தாா். சுமாா் 15 நாள்களுக்கு மேலாகியும் தனது கணவரின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்படாததால், விஜிகலா மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இதைபோல, 24 போ் காத்திருப்பதாகவும், சென்னையில் உள்ள அலுவலகத்தில் விசாரித்து இந்த மனுவின் நிலை குறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.