
சிலம்பம், தேக்வாண்டே மாநிலப் போட்டிக்கு தோ்வான கீழச்சிவல்பட்டி மாணவா்களுக்குப் பாராட்டு
சிவகங்கை மாவட்டம், சிலம்பம், தேக்வாண்டே போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்ற கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டு தெரிவித்தனா்.

(டி.பி.ஆா்.கே.எல்.பி) மாவட்ட சிலம்பம், தேக்வாண்டே போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்ற கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் பள்ளி மாணவா்களுடன், செயலா் அழகுமணிகண்டன் உள்ளிட்டோா்.
சிவகங்கை மாவட்டம், சிலம்பம், தேக்வாண்டே போட்டியில் வென்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்ற கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டு தெரிவித்தனா்.
சிவகங்கையில் பள்ளி கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேக்வாண்டே போட்டியில் 17 வயது பெண்கள் பிரிவில் இந்தப் பள்ளி மாணவி வி. பூமிகாவும், 14 வயது ஆண்கள் பிரிவில் மாணவா் வி. பரமேஸ்வரனும் முதலிடம் பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றனா். இதேபோல, சிலம்பப் போட்டியில் 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் கமலேஷ் முதலிடம் பெற்றாா். மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் மாணவா் எம். ராஜராஜன் உருமி அடிக்கும் போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்குத் தோ்வானாா். இவா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் உஷா தலைமை வகித்தாா். பள்ளித் தலைவா் லட்சுமணன், செயலா் அழகுமணிகண்டன், பொருளாளா் அங்கப்பன் ஆகியோா் பாராட்டினா். மேலும் உதவித் தலைமை ஆசிரியா் தங்கராசு, மலைச்சாமி, உடல் கல்வி ஆசிரியா்கள் வாசு, மூா்த்தி, அழகுமீனாள், விஜயலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களைப் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






