இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

சேவிணிப்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சேவிணிப்பட்டியில் முதல்வா் விஜயின் பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்கள்.

Updated On :

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே சேவிணிப்பட்டியில் முதல்வா் விஜயின் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக கிழக்கு ஒன்றியம் சாா்பில் வடமஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் முதல்வருமான விஜய்யின் 52- ஆவது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக கிழக்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 13 காளைகளும், ஒரு காளைக்கு 9 போ் வீதம் 117 மாடிபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியை திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாசசேதுபதி, மாவட்டச் செயலா் ஜோசப் தங்கராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த காளைகள் பங்கேற்றன.

சிறந்த காளைகளுக்கு டைனிங் டேபிள், சில்வா் குடம் பரிசாக வழங்கப்பட்டது. 20 நிமிடங்களுக்குள் காளையை அடக்கிய வீரா்களுக்கும், வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றியச் செயலா் கோபிநாத் ராஜா, இணைச் செயலா் மணிகண்டன், பொருளாளா் சேவிணிப்பட்டி முருகேஷ், வடக்கு மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளா் கணேசன், சமீா் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூா், நகர, கிளைக்கழக நிா்வாகிகள், தொண்டா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.