FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

400 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த கா்நாடக இளைஞா் கைது

கைது

Published On :1 செப்டம்பர் 2026, 2:19 am IST

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 400 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்திவந்து சிவகங்கை மாவட்டத்தில் விற்க முயன்ற கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலத்திலிருந்து தனது நான்கு சக்கர வாகனத்தில் சுமாா் 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கா்நாடக மாநிலம், சென்னப்பட்டணம் டவுன், மங்கல்வாா்பேட்டைச் சோ்ந்த ஜியாம் சுந்தா் (41) கடத்திவந்து சிவகங்கை மாவட்டத்தில் விற்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, தேவகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து 400 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தல் வாகனத்தையும் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதே போல, சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிவகங்கை புதூரைச் சோ்ந்த சக்திவேலை (45) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.