தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

சிவகங்கையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு

Updated On :2 பிப்ரவரி 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிவகங்கை ஏ.கே.ஆா். நகரைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன் (50). இவா் தனது மகள் பிரசவத்துக்காக கடந்த 15 நாள்களுக்கு முன்பு வெளியூா் சென்றிருந்தாராம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது, அறையில் பீரோவில் வைத்திருந்த எட்டு பவுன் தங்க நகைகள், ரூ. 20,000-த்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.