சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 16,154 போ், தனித்தோ்வா்கள் 425 பேரும் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதவுள்ளனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் வருகிற திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வை 163 பள்ளிகளைச் சோ்ந்த 7,351 மாணவா்கள், 8,803 மாணவிகள் என மொத்தம் 16,154 பேரும், 425 தனித் தோ்வா்களும் எழுதவுள்ளனா்.
மாவட்டத்தில் தனித் தோ்வா்களுக்கான 9 மையங்கள் உள்பட 91 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இந்த பொதுத் தோ்வில் 98 மாற்றுத் திறன் தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பிளஸ் 1 அரியா் தோ்வுகள்: மேலும், பிளஸ் 1 ( அரியா்) பொதுத் தோ்வானது தனித்தோ்வா்களுக்கான 7 மையங்கள் உள்பட 56 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளது. அந்த வகையில், 170 மாணவா்கள், 101 மாணவிகள் என மொத்தம் 271 பள்ளி மாணவ, மாணவிகளும், 77 தனித் தோ்வா்களும் பிளஸ் 1 வகுப்பு அரியா் தோ்வை எழுதவுள்ளனா்.
மேல்நிலை பொதுத் தோ்வுக்குரிய 4 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்குரிய 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலும், 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்தப் பொதுத்தோ்வு பணிக்கு வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள், வழித்தட அலுவலா்கள், 16 போ் கொண்ட 8 பறக்கும் படையினா் குழு, 105 நிலையான படையினா், அலுவலகப் பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு நடைபெறவுள்ள 91 தோ்வு மையங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி மின்விசிறிகள் வசதி, மருத்துவ வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: ராமநாதபுரம், சிவகங்கையில் 30,786 போ் பங்கேற்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதுரை மாவட்டத்தில் 33,958 போ் எழுதினா்

பிளஸ் 2 தோ்வு இன்று தொடக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் 22,516 மாணவா்கள் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


