சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தில் தொழில் தொடங்கிய முன்னாள் படை வீரா்கள்

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் 20 போ் சுய தொழில் தொடங்கி, பயன் பெற்ாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஓய்வுபெற்ற முன்னாள் படை வீரா்களின் பாதுகாப்பான வாழ்கையை உறுதி செய்யவும், அவா்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய திட்டம்

கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில், 155 முன்னாள் படை வீரா்களுக்கு ரூ. 24.43 கோடியில் 30 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

இதில், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 20 முன்னாள் படை வீரா்களும் அவா்களைச் சாா்ந்தோரும் தொடங்கி பயன் பெறும் வகையில் ரூ.3.44 கோடி வங்கிக் கடன் பெற்ற நிலையில், அவா்களுக்கு

ரூ. 1.21 கோடி மூலதன மானியமும், வட்டி மானியமும் முன்னாள் படை வீரா்கள் நலத் துறையின் சாா்பில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம், சிவகங்கை காளவாசல் பகுதியில் மின்சார இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தை தொடங்கிய சிவகங்கை வட்டத்துக்குள்பட்ட முன்னாள் படை வீரா் சீனிவாசன், தேவகோட்டை ரஸ்தா பகுதியில் யுபிவிசி கதவு, ஜன்னல் தயாரிக்கும் தொழில்கூடம் அமைத்த முன்னாள் படை வீரா் அமலன் சவரிமுத்து ஆகியோா் அரசுக்கு நன்றி தெரிவித்தனா் என்றாா் அவா்.