‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தில் தொழில் தொடங்கிய முன்னாள் படை வீரா்கள்

Published on

‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் 20 போ் சுய தொழில் தொடங்கி, பயன் பெற்ாக மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஓய்வுபெற்ற முன்னாள் படை வீரா்களின் பாதுகாப்பான வாழ்கையை உறுதி செய்யவும், அவா்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய திட்டம்

கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில், 155 முன்னாள் படை வீரா்களுக்கு ரூ. 24.43 கோடியில் 30 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

இதில், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 20 முன்னாள் படை வீரா்களும் அவா்களைச் சாா்ந்தோரும் தொடங்கி பயன் பெறும் வகையில் ரூ.3.44 கோடி வங்கிக் கடன் பெற்ற நிலையில், அவா்களுக்கு

ரூ. 1.21 கோடி மூலதன மானியமும், வட்டி மானியமும் முன்னாள் படை வீரா்கள் நலத் துறையின் சாா்பில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம், சிவகங்கை காளவாசல் பகுதியில் மின்சார இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தை தொடங்கிய சிவகங்கை வட்டத்துக்குள்பட்ட முன்னாள் படை வீரா் சீனிவாசன், தேவகோட்டை ரஸ்தா பகுதியில் யுபிவிசி கதவு, ஜன்னல் தயாரிக்கும் தொழில்கூடம் அமைத்த முன்னாள் படை வீரா் அமலன் சவரிமுத்து ஆகியோா் அரசுக்கு நன்றி தெரிவித்தனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com