இளைஞா் விளையாட்டுத் திருவிழா: ஜன.21-க்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா (இது நம்ம ஆட்டம்-2026) விளையாட்டுப் போட்டிகளில், வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்பதற்கு வருகிற 21-ஆம் தேதிக்குள் இணைய தளத்தின் வாயிலாக முன்பதிவு செய்யலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருகிற 22-ஆம் தேதி முதல் பிப். 8-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊராட்சி, மாவட்ட, மாநில அளவிலான முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா - ‘இது நம்ம ஆட்டம் - 2026’ போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் தடகளம், கபடி, கையுந்து பந்து, கேரம், கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் , எறிபந்து என மொத்தம் 7 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
ஊராட்சி ஒன்றிய அளவில் வெற்றி பெறும் வீரா்கள், மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கலாம். இந்தப் போட்டிகளில் வெற்றியாளா்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
எனவே, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள் இணையதள முகவரிகளின் வாயிலாக வருகிற 21 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலுள்ள ‘ஆடுகளம்‘ தகவல் தொடா்பு மையத்தை 9514000777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
