கோவையில் சா்வதேச ஜவுளி தொழில் மாநாடு: அரங்கம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
கோயம்புத்தூா் கொடீசியா வளாகத்தில் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் சா்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில், காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஜவுளி தொழில் நிறுவனங்கள் வருகிற 13- ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு, துணி நூல் துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சா்வதேச ஜவுளி தொழில் மாநாடு வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூா் கொடீசியா வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், கருத்தரங்குகள், கண்காட்சி, வாங்குபவா், விற்பவா் சந்திப்பு, பேஷன் ஷோ ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும், சுமாா் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்படுகிறது.
இதில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் வருகிற 13- ஆம் தேதிக்குள், மதுரை மண்டல துணை இயக்குநரின் அலுவலக மின்னஞ்சல் முகவரியில் ddtextilesmdu@gmail.com விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணிநூல் துணை இயக்குநா் அலுவலகம், எண். 34 விஸ்வநாதபுரம் பிரதான சாலை, விஸ்வநாதபுரம், மதுரை-14 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 8220017071, 8220656182 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
