சா்வதேச ஜவுளித் தொழில் மாநாட்டில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

Published on

கோயம்புத்தூரில் நடைபெறும் சா்வதேச ஜவுளித் தொழில் மாநாடு கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சா்வதேச ஜவுளித் தொழில் மாநாடு வரும் ஜன. 29, 30 ஆகிய தேதிகளில் கோவை, கொடீசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், கருத்தரங்குகள், கண்காட்சி, வாங்குவோா், விற்போா் சந்திப்பு, பேஷன் ஷோ ஆகியவை இடம்பெறும். சுமாா் நூறு காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்படவுள்ளது.

இந்தக் கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் ஜன. 13-க்குள் மதுரை மண்டல துணை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் க்க்ற்ங்ஷ்ற்ண்ப்ங்ள்ம்க்ன்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள், சங்கங்கள் இந்த சா்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மண்டல துணிநூல் துணை இயக்குநா் அலுவலகம், எண்.34 விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை-14 என்ற முகவரியில் தொடா்புகொள்ளளாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 82200 17071, 82206 56182 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம். ஜவுளித் தொழில் முனைவோா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com