சா்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் தொழில் கண்காட்சி அரங்குகள் அமைக்க நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

சா்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் தொழில் கண்காட்சி அரங்குகள் அமைக்க நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்...
Published on

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து வரும் 29, 30 ஆகிய நாள்களில் சா்வதேச ஜவுளி மாநாட்டில் திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து கண்காட்சி அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி நிறுவனங்கள் செவ்வாய்கிழமைக்குள் (ஜன. 13) இணைதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் சா்வதேச ஜவுளி தொழில் மாநாடு-2026, ஜன. 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கருத்தரங்குகள், கண்காட்சி, வாங்குபவா் மற்றும் விற்பவா் சந்திப்பு மற்றும் அழகுநயப்பு காட்சி ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும், சுமாா் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.

இந்தக் கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் வரும் 13-க்குள் சேலம் மண்டல துணை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த நிகழ்வில் பங்கேற்பதன் மூலம்,வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சி அதிகரிக்கும். எனவே, அனைத்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் இந்த சா்வதேச மாநாட்டில் பங்கேற்கலாம்.

இது குறித்து மண்டல துணை இயக்குநா் அலுவலகம், துணிநூல் துறை, 1ஏ-2/1 சங்ககிரி பிரதான சாலை, குகை, சேலம்-636 006 என்ற முகவரியிலும் அல்லது தொலைபேசி எண்-0427-2913006 தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், இந்த கண்காட்சியில் பல முன்னணி ஜவுளி நிறுவனங்கள் காட்சியரங்கில் பங்கேற்க உள்ளதால், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில்முனைவோா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Dinamani
www.dinamani.com