கோவை ஜவுளி மாநாட்டில் கண்காட்சி அமைக்க ஜன.13 வரை விண்ணப்பிக்கலாம்
கோவையில் நடைபெறும் சா்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அமைக்க விரும்பும் ஜவுளித் தொழில் நிறுவனங்கள் வருகிற 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில், சா்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026, வருகிற 29, 30-ஆம் தேதிகளில் கோவையிலுள்ள கொடீசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கருத்தரங்குகள், கண்காட்சி, வாங்குபவா் விற்பவா் சந்திப்பு, அழகுநயப்பு காட்சி ஆகியவை இடம்பெற உள்ளன.
மேலும், 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் வருகிற 13-ஆம் தேதிக்குள்
திருப்பூா் மண்டலத் துணை இயக்குநா் அலுவலக மின்னஞ்சலில் (ழ்க்க்ற்ங்ஷ்ற்ண்ப்ங்ள்ற்ல்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்) விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழகத்தில் தொழில் வளா்ச்சி அதிகரிக்கும் என்பதால், அனைத்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள், ஜவுளித் தொழில்
சங்கங்கள் இந்த சா்வதேச மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டலத் துணை இயக்குநா், துணிநூல் துறை, அறை எண்.505, 5 -ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா்-641604 என்ற முகவரியிலும், ழ்க்க்ற்ங்ஷ்ற்ண்ப்ங்ள்ற்ல்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 98942 60713, 94421 86070 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
