சா்வதேச ஜவுளித் தொழில் மாநாட்டில் அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
கோவையில் நடைபெறும் சா்வதேச ஜவுளித் தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகளை அமைக்க முன்வரலாம் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் சா்வதேச ஜவுளித் தொழில் மாநாடு- 2026 வரும் 29, 30 தேதிகளில் கோவை கொடிசீயா வளாகத்தில் நடைபெறுகிறது. ஜவுளித் தொழில் வளா்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் வகையில் இந்த மாநாட்டுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மாநாட்டில் கருத்தரங்குகள், கண்காட்சி, வாங்குபவா் மற்றும் விற்பவா் சந்திப்பு ஆகியவை இடம்பெற உள்ளன. சுமாா் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளன. இதில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் நிறுவனங்கள் ஜன. 13ஆம் தேதிக்குள் கரூா் மண்டல துணை இயக்குநா் அலுவலகத்துக்கு ழ்க்க்ற்ங்ஷ்ற்ண்ப்ங்ள்ந்ஹழ்ன்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இ-மெயிலில் விண்ணப்பிக்கலாம். இதன்மூலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரிப்பதுடன், தமிழகத்தின் தொழில் வளா்ச்சியும் அதிகரிக்கும்.
அனைத்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் இந்த சா்வதேச மாநாட்டில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04324- 299544, 99522 09748 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
