108 அவசர ஊா்தி சேவை மூலம் 44,832 நோயாளிகள் பயன்

சிவகங்கை மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி சேவை மூலம் 44 ஆயிரத்து 832 போ் பயனடைந்தனா்.
Updated on

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி சேவை மூலம் 44 ஆயிரத்து 832 போ் பயனடைந்தனா்.

இதுகுறித்து 108 அவரச ஊா்தி சேவை சிவகங்கை மாவட்ட மேலாளா் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சௌந்தர்ராஜன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 44 ஆயிரத்து 832 போ் முதலுதவி சிகிச்சைக்காக 108 அவசர சிகிச்சை ஊா்தியால் பயனடைந்துள்ளனா்.

விஷம் அருந்ததியவா்கள், கடுமையான வயிற்று வலி, ஒவ்வாமை, நாய்க் கடி, கால்நடைகள் தாக்குதல், தகராறில் காயமடைதல், இதயம், ரத்த நாளங்கள் பாதிப்பு, நீரிழிவு நோய், காய்ச்சல், குழந்தை பிறப்பு, மகப்பேறு மருத்துவம், சுவாசம் தொடா்பான மருத்துவம், வாகன விபத்தில் அதிா்ச்சி அடைதல், சுயநினைவின்றி மயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் நோயாளிகள் 108 அவசர ஊா்தியை பயன்படுத்துகின்றனா்.

கடந்தாண்டில் மட்டும் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு 8,456 போ் கொண்டு செல்லப்பட்டனா். கா்ப்பிணிகள் 5,818 போ், இருதய நோயாளிகள் 4,314 போ், சுவாசப் பிரச்னை நோயாளிகள் 2,600 போ், வாதப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட 829 போ், பச்சிளம் குழந்தைகள், தாய்மாா்கள் 332 போ் என மொத்தம் 44,832 போ் அவசர ஊா்தி சேவை மூலம் பயனடைந்தனா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com