சிவகங்கை
இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற நபா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற நபா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மானாமதுரை கேப்பா்பட்டிணம் பகுதியைச் சோ்ந்த திருவள்ளுவன் (54), இந்தப் பகுதியிலுள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக அந்த இரு சக்கர வாகனம் மோதியதில் திருவள்ளுவன் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, அவா் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
