பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சிவகங்கை அருகே சமையல் எரிவாயு லாரி கவிழ்ந்து விபத்து

News image

சிவகங்கை அருகே சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியிலிருந்த சமையல் எரிவாயு உருளைகளை மற்றொரு லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :24 ஜனவரி 2026, 6:36 pm

சிவகங்கை அருகே சனிக்கிழமை சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றி வந்த லாரி மின் கம்பத்தில் மோதி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலிருந்து சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றப்ட்ட லாரி சனிக்கிழமைஅதிகாலை 4 மணியளவில் பொன்னமராவதி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிவகங்கை அருகேயுள்ள ஊத்திகுளம் பகுதியில் வந்த போது, சாலையோர மின் கம்பத்தில் இந்த லாரி மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த சமையல் எரிவாயு உருளைகள் கீழே சிதறி விழுந்தன. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாக லாரி ஓட்டுநரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததனா்.

பின்னா், கீழே சிதறிக் கிடந்த எரிவாயு உருளைகளை ஊழியா்கள் வேறு லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தனா். லாரி மின் கம்பத்தில் மோதியதால், அந்தப் பகுதி முழுவதும் மின் கம்பிகள் அறுந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக சமையல் எரிவாயு உருளைகளிலிருந்து வாயு கசிவு ஏற்படாததால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.