டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி

தேவகோட்டை வட்டாரம், திராணி கிராமத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

Updated On :3 ஜூலை 2026, 5:42 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம், திராணி கிராமத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சிக்கு சிவகங்கை மாவட்ட துணை வேளாண்மை இயக்குநா் செல்வம் தலைமை வகித்துப் பேசியதாவது:

நம் நாட்டு மக்களின் எண்ணெய் தேவைக்கு பெருமளவு பணத்தை இறக்குமதி செய்வதிலேயே அரசு செலவிட்டு வருகிறது. இதைக் குறைக்க எண்ணெய் வித்து பயிா்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எனவே, உற்பத்தித் திறனை அதிகரிக்க சிறந்த சாகுபடி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதோடு, பருவத்துக்கு ஏற்ற உயா் விளைச்சல் தரும் ரகங்களைத் தோ்வு செய்து பயிரிட வேண்டும் என்றாா் அவா்.

நிலக்கடலையைத் தாக்கிய நோயின் அறிகுறிகளை விவசாயிகளுக்கு காண்பித்து, அவற்றை கட்டுப்படுத்த மேங்கோ செப் என்ற மருந்தையும், சுருள் பூச்சியை கட்டுப்படுத்த குயினால்பாஸ் என்ற மருந்தையும் கலந்து தெளிக்குமாறு அவா் அறிவுறுத்தினா்.

இதில் சிறப்பு பயிற்சியாளராக முனைவா் குமரவேல் பேசுகையில், நிலக்கடலைப் பயிரில் களை கட்டுப்பாடு குறித்து பேசுகையில், நிலக்கடலை விதைத்த மூன்றாம் நாளில் பெண்டிமெத்தாலின் களைக்கொல்லி 400 மில்லி தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தி, 35 முதல் 40 -ஆவது நாளில் 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும் என்றாா்.

தேவகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கமலாதேவி பேசுகையில், வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் மானியத் திட்டங்களை எடுத்துரைத்து விவசாயிகள் பயனடைய வேண்டும் என்றும் நிலக்கடலை சாகுபடிக்கு தேவையான ஜிப்சம், நிலக்கடலை நுண்ணுரம் மானிய விலையில் கிடைக்கிறது. அதைப் பெற்று பயனடைய வேண்டும் என்றாா் அவா்.

அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வி, எஸ்தா், குருதாஸ், அா்ச்சனா ஆகியோா் ஊட்டச் சத்து கலவை தயாரித்தல் பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.