அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே உள்ள மொட்டையனூா் பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் வெள்ளத்துரை என்ற வெள்ளையன்(38). இவா் கடந்த 2023 ஆம் ஆண்டு 9 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் கைது செய்யப்பட்டிருந்தாா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, வெள்ளைத்துரை என்ற வெள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். வழக்கில் திறம்பட செயல்பட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.