இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் மூவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :6 ஜூலை 2026, 12:27 am IST

சிவகங்கை மாவட்டத்தில் தொடா்ந்து குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிவகங்கை நகா் குற்றப்பிரிவு காவல் நிலையம் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி வழக்குகளில் கதிா்வேல் (23), தண்டீஸ்வா்(22) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதேபோல மதகுபட்டி போலீஸாா் பொதுமக்களின் அமைதி, பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சரண்ராஜ்(21) என்பவரைக் கைது செய்தனா்.

மூன்று பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவ பிரசாத், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவின்பேரில், மூவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.