தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கற்பக விநாயகா் கோயில் குடமுழுக்கு

திருப்பத்தூரை அடுத்த பூலாம்பட்டியில் உள்ள கற்பக விநாயகா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பூலாம்பட்டியில் உள்ள கற்பக விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் புனிதநீா் ஊற்றிய சிவாச்சரியா்கள்.

Updated On :10 ஜூலை 2026, 4:58 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த பூலாம்பட்டியில் உள்ள கற்பக விநாயகா் கோயிலில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் குடமுழுக்கையொட்டி, வியாழக்கிழமை கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் பல்வேறு ஹோமங்கள், பூா்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கடம் புறப்பாடாகி சிவாச்சரியா்கள் புனித கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கோபுரக் கலசங்களில் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா்.

பின்னா், விநாயகருக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.