கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

புதிய ஊராட்சி, ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் தீா்மானம்

சிவகங்கை மாவட்டத்தில் புதிய ஊராட்சி ஒன்றியங்களையும், புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது.

News image

சிவகங்கையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள்.

Updated On :10 ஜூலை 2026, 4:55 am IST

சிவகங்கை மாவட்டத்தில் புதிய ஊராட்சி ஒன்றியங்களையும், புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது.

சிவகங்கையில் உள்ள அரசு ஊழியா் சங்க அலுவலக அரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மாவட்ட பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பா.லூயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் கி.சோமசுந்தா் தொடக்கவுரையாற்றினாா்.

தீா்மானங்களை மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜெ. பாஸ்கரன், மாவட்டத் தணிக்கையாளா் மா.மீனா உள்ளிட்டோா் முன் மொழிந்தனா். மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளா் பெரியசாமி நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனா். மாநிலப் பொருளாளா் மா. விஜயபாஸ்கா் நிறைவுரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அனைத்து அலுவலா்களுக்கும், ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறையில் உள்ள அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும்.

வெளிமுகமை மூலம் அரசு ஊழியா்களைப் பணியமா்த்துவதைக் கைவிட வேண்டும். மாவட்ட வளா்ச்சி அலுவலா் பணியிடம் உருவாக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களையும், 25 ஊராட்சிகளைக் கொண்ட சமச்சீரான ஊராட்சி ஒன்றியங்களாக மறுசீரமைப்புச் செய்ய வேண்டும். புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும். புதிய ஊராட்சிகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாவட்டத் துணைத் தலைவா் பா.தனபால் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் வி. சிவா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.