சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

செங்கல்பட்டில் ஊரக வளா்ச்சித் துறை பணிகள்: அமைச்சா் ஆய்வு

News image
Updated On :4 ஜூன் 2026, 6:15 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறும் திட்டப் பணிகளை அமைச்சா் என். ஆனந்த் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சென்றடையும் போது, தரமானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் சாலைகள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளாக கருதப்படும் பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தெரிவித்தாா்.

துறையின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் வெளிப்படைதன்மையுடன் இருக்க வேண்டுமென்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, திருப்போரூா் வட்டம், கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பல்வேறு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நாற்றங்கால் பண்ணை பணி, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நெகிழி கழிவு மேலாண்மை அலகு மற்றும், சாண எரிவாயு மின் சக்தி உற்பத்தி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் எம்.வீரப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் விஜயராஜ்(திருப்போரூா்), எஸ்.தியாகராஜன்(செங்கல்பட்டு), மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சாந்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

Story image