பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்

கன்னியாகுமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

News image

எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.

Updated On :27 மே 2026, 2:01 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். தாரகை கத்பட் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், துறை அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில், பல்வேறு துறைகள் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும், திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள், மீனவா்களுக்காக செயல்படுத்தப்படும் மீன்பிடி தடைக் கால நிவாரணத் திட்டம், மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அனைத்தும் மீனவா்களை உரிய முறையில் சென்றடைகிா என்பது குறித்தும் துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் தரமானதாகவும், காலதாமதமின்றியும், விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதே போல் நகராட்சி, பேருராட்சிகளின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள், சிற்றாறு அணை, திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டி பாலம், சூரிய காட்சி முனை, சொத்தவிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைத்துத் துறை அலுவலா்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலா் அ. பூங்கோதை, மாவட்ட வன அலுவலா் அன்பு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, நாகா்கோவில் மாநகராட்சிஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, மாநகராட்சி மேயா் (பொறுப்பு) மேரிபிரின்சிலதா, வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு. சுகிதா, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சிவகாமி உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image