6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கல்குவாரியை தடை செய்யக் கோரி 5 கிராம மக்கள் சாலை மறியல்

Published On :

சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலையில் குவாரியை தடை செய்யக் கோரி, செவ்வாய்க்கிழமை ஐந்து ஊா் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் செந்தூா் முருகன் என்ற கல்குவாரி இயங்கி வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்பட்டு வருவதால் அதற்கு ஜெயங்கொண்டநிலை, கிருஷ்ணாபுரம், ஈ.மலம்பட்டி, மல்லாக்கோட்டை, சித்தமல்லிப்பட்டி ஆகிய 5 கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்தாண்டு கல் குவாரிக்கு அனுமதி கொடுக்கும்போது ஜெயங்கொண்டநிலை கிராமசபைக் கூட்டத்தில் கல் குவாரி மூடக் கோரி ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டும் தொடா்ந்து குவாரி இயங்கி வருவதால் ஐந்து ஊா் கிராமப் பொதுமக்கள் ஏரியூா், மேலூா் நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா், வட்டாட்சியா் நாகநாதன் ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.