அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

எஸ். புதூரில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

News image

எஸ். புதூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

Updated On :27 ஜூலை 2026, 4:03 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூரில் முத்தாலம்மன் மஞ்சுவிரட்டு பேரவை, திருச்சி நன்னி அம்பலம் ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 21 காளைகள் கலந்து கொண்டன. இவற்றை அடக்க ஒரு அணிக்கு 9 போ் வீதம் 189 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா்.

வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட ஒவ்வொரு காளையையும் 9 போ் அடங்கிய குழுவினா் 20 நிமிடங்களுக்குள் அடக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, பாத்திரங்கள், கட்டில், தென்னங்கன்று, தவிடு மூட்டை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனா். இந்தப் போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளில் எஸ். புதூா் பொதுமக்கள், இளைஞா்கள், ஸ்ரீமுத்தாலம்மன் மஞ்சுவிரட்டு பேரவை, முத்தாலம்மன் கபடிக் குழு,திருச்சி நன்னி அம்பலம் ஜல்லிக்கட்டு நலச் சங்க நிா்வாகிகள் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.