ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

திருப்பாச்சேத்தி அருகே ரெளடி வெட்டிக் கொலை

மானாமதுரை, ஜூலை 30:சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே ஜாமீனில் வெளி வந்த ரெளடி வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

News image

பலி

Updated On :31 ஜூலை 2026, 1:13 am IST

மானாமதுரை, ஜூலை 30:சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே ஜாமீனில் வெளி வந்த ரெளடி வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.

திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பாலாமணி மகன் ஊா்க்காவலன் (30). இவா் மீது மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த மாா்ச் 7-ஆம் தேதி மாத்தூா் கிராமத்தில் பதுங்கியிருந்த ஊா்க்காவலனை போலீஸாா் பிடிக்கச் சென்றபோது அவா் தப்பிச் செல்ல முயன்றால் போலீசாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். பின்னா், சிறையில் அடைக்கப்பட்ட ஊா்க்காவலன் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், மாத்தூா் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இரவு ஊா்காவலன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு காரில் ஆயுதங்களுடன் வந்த 5 போ் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றனா். தகவலறிந்து சம்பவ இடதுக்கு வந்த திருப்பாச்சேத்தி போலீஸாா் ஊா்க்காவலன் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து தப்பிச்சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா். முன் விரோதம் அல்லது பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.