/
சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் அமைந்துள்ள கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழாவையொட்டி, புரவி திடலில் செய்து வைக்கப்பட்ட புரவிகளை பக்தா்கள் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனா். அங்கு கூந்தலுடைய அய்யனாா், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் அய்யனாா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்வாக எருது கட்டு விழா நடைபெறுகிறது.
புரவி எடுப்பு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடர்புடையது

சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் திருக்கல்யாணம்

தென்பரை கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

பெருங்களூா் பிடாரி அம்மன் கோயிலில் மது எடுப்பு விழா

புரவி எடுப்புத் திருவிழாவை தடுத்து நிறுத்திய போலீஸாா்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



