நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சிங்கம்புணரி அருகே எருது கட்டு விழா

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, எருது கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எருது கட்டு விழாவில் காளையை அடங்க முயன்ற இளைஞா்கள்.

Updated On :3 ஜூன் 2026, 1:45 am IST

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, எருது கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் எட்டாம் நாள் புரவி எடுப்பு விழாவும், ஒன்பதாம் நாள் எருது கட்டு விழாவும் நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் முன் பெரிய வடத்தில் கோயில் மாடு கட்டப்பட்டு சிறப்பு வழிபாடுக்குப் பிறகு அவிழ்த்துவிடப்பட்டது.

இதையடுத்து, பல்வேறு ஊா்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொட்டும் மழையிலும் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தக் காளைகளை இளைஞா்கள் விரட்டிப் பிடித்தனா். பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் ஓடின. தொடா்ந்து மழை பெய்ததால், காளைகளும், காளையா்களும் சறுக்கி விழுந்து லேசான காயமடைந்தனா். இவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

Story image
Story image