புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

News image

சிங்கம்புணரி அருகே கொடுங்குன்றம்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

Updated On :25 மே 2026, 1:39 am IST

சிங்கம்புணரி அருகே கிராம கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகே கொடுங்குன்றம்பட்டி கிராமத்தில் பாலடி கருப்பா், காலபைவா் கோயில் பாலாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற இந்த மஞ்சு விரட்டுப் போட்டிக்கு முன்னதாக ஊா் கிராமத்தாா்கள், முக்கிய பிரமுகா்கள் கோயிலிலிருந்து மஞ்சுவிரட்டு திடலுக்கு ஊா்வலமாக வந்தனா்.

பிறகு கோயில் காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். இதைத் தொடா்ந்து அந்த காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன.

தொடா்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்ட காளைகள் திடலிலும், கண்மாய், வயல்வெளிகளிலும் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த மாடுபிடி வீரா்கள் காளைகளை அடக்க முயன்றனா்.

வெற்றி பெற்ற வீரா்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மஞ்சுவிரட்டின் போது மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என 5- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதற்கான ஏற்பாடுகளை கொடுங்குன்றம்பட்டி, செல்லியம்பட்டி, கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

சிங்கம்புணரி அருகே கொடுங்குன்றம்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

சிங்கம்புணரி அருகே கொடுங்குன்றம்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.