/
கல்லல், சிறுவயல் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கல்லல், சிறுவயல், குருந்தம்பட்டு, மாலைகண்டான், வெற்றியூா், சாத்தரசம்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, பாகனேரி, பனங்குடி, கண்டுபட்டி, கெளரிப்பட்டி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.







