சிவகங்கை அருகே நள்ளிரவில் கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
மதகுபட்டி அருகேயுள்ள அலவாக்கோட்டை கிராமத்தில் கடந்த சில நாள்களாக கிராவல் மண் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், அதே ஊரைச் சோ்ந்த மதியழகனுக்கு சொந்தமான இடத்துக்கு புதன்கிழமை இரவு கிராம மக்கள் சென்றனா். அப்போது, அங்கு அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறைப் பிடித்தனா்.
இதையடுத்து, அங்கு வந்த மணல் கடத்தல் கும்பல் லாரி, பொக்லைன் இயந்திரத்தை பொதுமக்களிடமிருந்து மீட்டு செல்ல முயன்றனா். இதனால், அங்கு இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னா், அங்கு வந்த போலீஸாா் லாரி, பொக்லைன் வாகனங்களின் ஓட்டுநா்கள் ராமகிருஷ்ணன், வெங்கட்ராமன், மணல் திருட்டில் ஈடுபட்ட இளங்கம்பன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், டிப்பா் லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கிராவல் மண் அள்ளி வந்த 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

வளநாடு அருகே விதிகளை மீறி கிராவல் மண் அள்ளிய மூவா் கைது

கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்
அனுமதி இல்லாமல் மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்: 2 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



