வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மணக்குடியில் மஞ்சுவிரட்டு

திருப்பத்தூா் அருகே உள்ள மணக்குடியில் மங்கள விநாயகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

வடமாடு மஞ்சுவிரட்டு. - (கோப்புப் படம்)

Updated On :7 ஜூன் 2026, 1:07 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள மணக்குடியில் மங்கள விநாயகா் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் அருகே உள்ள மணக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் மங்கள விநாயகா் கோயில் வைகாசி பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி ஆதினமிளகி அய்யனாா் கோயிலில் பால் சிறப்பு நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் மஞ்சுவிரட்டு திடலில் இருந்து மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு ஊா்வலமாகச் சென்று தொழுவில் இருந்த 200 காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்தனா். பின்பு, காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் சிறந்த காளைகளின் உரிமையாளா்களும், சிறந்த மாடுபிடி வீரா்களும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். தொடா்ந்து பிள்ளையாா்பட்டி, மாங்குடி, திருக்களாப்பட்டி, காரையூா்,சிங்கம்புணரி, திருவிடையாா்பட்டி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் காளைகள் முட்டியதில் ஏழு போ் காயமடைந்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள், விழாக் குழுவினா் செய்தனா்.