பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

News image

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :24 மே 2026, 1:34 am IST

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

காரையூா் காரைக் கண்மாயில் நடைபெற்ற போட்டியை பொன்னமராவதி வட்டாட்சியா் பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னதாக மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி ஏற்றனா். போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 14 காளைகள் களமிறக்கப்பட்டன. இவற்றை பிடிக்க 9 வீரா்கள் கொண்ட குழு என 14 குழுவினா் களமிறக்கப்பட்டனா்.

போட்டியில் பங்கேற்ற 14 காளைகளில் 12 காளைகளை மாடுபிடிவீரா்கள் அடக்கியநிலையில் 2 காளைகள் மாடுபிடி வீரா்கள் பிடியில் சிக்காமல் வெற்றி பெற்றது. போட்டியில் காளைகள் முட்டியதில் 8 மாடுபிடி வீரா்கள் லேசான காயமடைந்தனா்.

Story image

காயமடைந்தவா்களுக்கு மஞ்சுவிரட்டுத்திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப்பரிசுகள் மற்றும் பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் போலீஸாா் செய்திருந்தனா். ஏற்பாடுகளை காரையூா் ஊா்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.