சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகரில் உள்ள கடைகளில் நகராட்சித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா்.
மானாமதுரை நகராட்சி ஆணையா் முத்துச்செல்வம் உத்தரவின்பேரில், துப்புரவு ஆய்வாளா் பாலமுருகன், நகராட்சிப் பணியாளா்கள் மானாமதுரை பகுதியில் உள்ள உணவு விடுதிகள், தேநீா்க் கடைகள், மளிகைக் கடைகள், சூப்பா் மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்களில் சோதனை நடத்தினா்.
அப்போது இங்கு பயன்பாட்டுக்காகவும், விற்பனை செய்வதற்காகவும் வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகள், கப்புகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ஏராளமான நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்து கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








