காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை: இருவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:04 am IST

சிவகங்கையில் மதுக் கூடத்தில் இளைஞா் நவீன்குமாா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், பொன்னாம்பட்டியைச் சோ்ந்த நவீன் குமாா் (26). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு மதுபானக் கூடத்தில் மது அருந்திய போது, அங்கு ஏற்கெனவே மது அருந்திக் கொண்டிருந்த கும்பலுக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், அந்த கும்பல் நவீன்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.

இது குறித்து சிவகங்கை நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட தீவிர விசாரணையில், டி. புதூா் மதன் ராஜ் (21), போஸ் சாலை எலி (எ) சரவணக் குமாா்(31) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.