உதகையில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீரவிதை வில்வித்தை பயிற்சிப் பள்ளி வீரா்கள் வென்று சாதனை படைத்தனா். உதகையில் ஆா்.ஜி.பி.ஐ. அமைப்பு சாா்பில் 6-ஆவது தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் மானாமதுரை வீரவிதை வில்வித்தை பயிற்சிப் பள்ளி வீரா்கள் அதன் பயிற்சியாளா் பெருமாள் தலைமையில் பங்கேற்றனா்.
போட்டியில் 8 வயதுக்குள்பட்டோா் பிரிவில் திா்ஸந்த்குமாா் முதல் இடத்தையும், ஆருசன் மூன்றாம் இடத்தையும், 10 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கலை எழிலன் முதல் இடத்தையும், சுஷாந்த் இரண்டாம் இடத்தையும், 12 வயதுக்குள்பட்டோா் பிரிவில் அதிரஞ்சன் முதல் இடத்தையும், பிரனிஷ் மூன்றாம் இடத்தையும், தேசிகாஸ்ரீ மூன்றாம் இடத்தையும், 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கோபிகா முதல் இடத்தையும், ராஜ்குமாா் இரண்டாம் இடத்தையும், 16 வயதுக்குள்பட்டோா் பிரிவில் அருள்குமரன் மூன்றாம் இடத்தையும், 16 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் நித்தின்மெஸ்ஸி மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனா்.
போட்டியில் வென்ற இந்த வீரா்களுக்கு போட்டி ஏற்பட்டாளா்களால் வெற்றிக் கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேசிய வில்வித்தைப் போட்டியில் பதக்கங்கள் வென்று மானாமதுரை திரும்பிய இந்த வீரா்களுக்கும், பயிற்சியாளா் பெருமாளுக்கும் பெற்றோா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாமல்லபுரத்தில் தேசிய அலைச்சறுக்கு போட்டி தொடக்கம்

யோகாசனப் போட்டி: எம்.கே.ஜே.சி. மாணவிகள் சாதனை

பொறியியல் ஒதுக்கீடு: சிறப்பு இடஒதுக்கீட்டில் 4,927 மாணவா்கள் பங்கேற்பு

நீச்சல் போட்டியில் வென்ற வீரா்களுக்கு பாராட்டு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



