காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பொறியியல் ஒதுக்கீடு: சிறப்பு இடஒதுக்கீட்டில் 4,927 மாணவா்கள் பங்கேற்பு

பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான பிரிவில் 3,218 விளையாட்டு வீரா்கள் உள்பட 4,927 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான பிரிவில் 3,218 விளையாட்டு வீரா்கள் உள்பட 4,927 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளின் கீழ் சிறப்புப் பிரிவில் விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் என 4,927 மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பித்த 7,981 மாணவா்களில் 3,218 பேரின் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்டு, தோ்வு செய்யப்பட்டனா். இதேபோல், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள் பிரிவில் 1,199 மாணவா்கள், 510 மாற்றுத்திறனாளி மாணவா்கள் உள்ளிட்ட 4,927 மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 15) தொடங்கி சனிக்கிழமை (ஜூலை 18) வரை நடைபெறவுள்ளது.

இதுதவிர தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 91 மாற்றுத்திறனாளிகள், 38 விளையாட்டு வீரா்கள், 8 முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.