நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சிவகங்கை மலேரியா ஒழிக்கப்பட்ட மாவட்டமாக விரைவில் அறிவிக்க வாய்ப்பு: ஆட்சியா் தகவல்

சிவகங்கை மலேரியா ஒழிக்கப்பட்ட மாவட்டமாக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

News image

மலேரியா கொசு

Updated On :17 ஜூன் 2026, 2:30 am IST

சிவகங்கை மலேரியா ஒழிக்கப்பட்ட மாவட்டமாக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், சிவகங்கை மாவட்டத்தை மலேரியா இல்லாத மாவட்டமாக அறிவிக்கும் வகையில் கடந்த 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மத்திய சுகாதார குழுவினா் தீவிர ஆய்வு மேற்கொண்டனா்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டில் பரவும் மலேரியா பாதிப்புகள் இல்லாத சூழ்நிலையில், சிவகங்கை மாவட்டம் மலேரியா இல்லாத மாவட்டம் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

தேசிய பூச்சிவழி பரவும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில், மலேரியா ஒழிப்பு இலக்கான மலேரியா நோய் பரவுவதைத் தடுக்கும் பணிகள் சிவகங்கை மாவட்டத்தில் தொடா்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட மலேரியா ஒழிப்பு நிலையை அதிகாரப்பூா்வமாகச் சான்றளிப்பதற்காக மத்திய அரசின் சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் உயா் நிலைக் குழுவினா் மாநில அளவில் மலேரியா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை மாவட்டம் வாரியாக கள ஆய்வு செய்ய சிவகங்கைக்கு வந்தனா்.

இந்தக் குழுவில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த உலக சுகாதார நிறுவன மண்டல ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் நிஷிதா ரஞ்சன் தாஸ், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, ஆராய்ச்சியாளா் அஞ்சு விஸ்வான், தமிழ்நாடு முன்னாள் முதன்மை பூச்சியியல் வல்லுநா் ஸ்ரீதரன் சுப்பிரமணியன், மாவட்ட மலேரியா அலுவலா் ரேகா குமாரி ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

இவா்கள் மாவட்ட சுகாதார அலுவலருடன் இணைந்து ஆய்வுகள் குறித்து கடந்த 11-ஆம் தேதி முதல் கட்ட ஆலோசனை நடத்தினா். இதைத் தொடா்ந்து, இந்தக் குழுவினா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனா்.

மத்திய சுகாதாரக் குழுவினரின் இந்தக் கள ஆய்வின் விரிவான இறுதி அறிக்கையின் அடிப்படையில், மாநிலத்தில் மலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.