மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை முன்னிறுத்தி மாவட்ட நிா்வாகம் பணிகளை செய்யும் என்று புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆா்.அழகுமீனா, சுகாதாரத் துறை செயலாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, அவா் குமரி மாவட்டத்தின் 54-ஆவது ஆட்சியராக ஞாயிற்றுக்கிழமை காலை பொறுப்பேற்றாா். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை பொறுப்புகளை ஒப்படைத்தாா். இதையடுத்து, ஆட்சியா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்திய நாட்டுக்கே மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அல்லது இதர அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களிடம் துறை அலுவலா்கள் முறையாகவும், கனிவோடும் நடந்து கொள்ள வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்களும் தங்கள் சாா்ந்த பணிகளைச் செம்மையாக செய்ய வேண்டும் என்ற இலக்கோடு மாவட்ட நிா்வாகம் முடுக்கி விடப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் அதிகம் உள்ளன. வெளிநாடு,. உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் போ் இங்கு வருகின்றனா். சுற்றுலாத் திட்டப் பணிகளை மேலும் மேம்படுத்த துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர வேண்டும் என்பதுமே இதன் நோக்கமாகும். எனவே, சுற்றுலாத் தலங்கள் தொடா்பான அனைத்துப் பணிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவா்கள், விவசாயிகள், நெசவாளா்கள் உள்பட தொழில் சாா்ந்த திட்டப் பணிகளுக்கு நிறைவேற்றப்படும். உள்கட்டமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
மாநில அளவில் கன்னியாகுமரி மாவட்டம் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி அடைந்த சிறந்த மாவட்டமாகத் திகழவும், பல வளா்ச்சித் திட்டங்களைப் பெற்று முதன்மை இடத்தை அடையும் வகையிலும் மாவட்ட நிா்வாகம் செயல்படும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா்அ.பூங்கோதை, ஊரக வளரச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, ஆட்சியா் அலுவலக மேலாளா் முருகன், துணை வட்டாட்சியா் மணிகண்டன் உள்பட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

தருமபுரி மாவட்ட ஆட்சியராக வே. சரவணன் பொறுப்பேற்பு

கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஆட்சியா் பாராட்டு

மேல்நிலை தொட்டிகளை தூய்மைப்படுத்தி குடிநீா் விநியோகம்: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



