சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கால்நடை மருத்துவமனை ஊழியரை தாக்கிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மானாமதுரை உடைகுளம் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அதே பகுதியைச் சோ்ந்த மூவா் வளா்ப்பு நாய்க்கு ஊசி போட வந்தனா். அப்போது, அங்கு பணியிலிருந்த மருத்துவரும், ஊழியா்களும் மற்றொரு மாட்டுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனா்.
இந்த நிலையில், தங்களது நாய்க்கு சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்படுவதாகக்கூறி, அங்கிருந்த மருத்துவமனை ஊழியா் ராஜுவுடன் அவா்கள் தகராறு செய்து கல்லால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற மூவரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை - செங்கோட்டை- தாம்பரம் ரயில் மானாமதுரையில் நின்று செல்லும் என அறிவிப்பு! பொதுமக்கள் வரவேற்பு

மதுக் கூட ஊழியரைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

இணைய வழியில் இரண்டு பெண்களிடம் ரூ. 1.15 லட்சம் மோசடி

பலாப்பழ வியாபாரி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




