சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ப. ஆகாஷ் திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டாா்.
முன்னதாக தருமபுரி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கோட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி கோட்டத்தின் சாா்- ஆட்சியராகவும், பெருநகா் சென்னை மாநகராட்சியில் வட்ட துணை ஆணையராகவும், சென்னை (வடக்கு) குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்றல் வாரியத்தின் செயல் இயக்குநராகவும் பணியாற்றினாா்.
மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியராகவும், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலளராகவும், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் செயல் இயக்குநராகவும், நாகப்பட்டினம், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினாா்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், புதிய மாவட்ட ஆட்சியராக ப. ஆகாஷ் பொறுப்பு ஏற்றுக் கொண்டாா். இவருக்கு அனைத்துத் துறை அலுவலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனுமதியின்றி செயல்படும் 16 பள்ளிகளுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

இளைஞா் உயிரிழந்த வழக்கு: குற்றப் பத்திரிகை நகல் வழங்காமல் அலைக்கழிப்பதாக குடும்பத்தினா் புகாா்

கல்குவாரி விவகாரம்: சிவகங்கை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

வீட்டுமனையிடத்தை ஒப்படைக்க இசைக் கலைஞா்கள் கோரிக்கை
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



