ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வஞ்சினிப்பட்டியில் மத நல்லிணக்க பூக்குழித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வஞ்சினிப்பட்டியில் மொகரம் பண்டிகையையொட்டி, இந்துக்கள்-முஸ்லிம்கள் இணைந்து மத நல்லிணக்க பூக்குழித் திருவிழாவை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

News image

திருப்பத்தூா் அருகே வஞ்சினிப்பட்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பூக்குழி இறங்கிய பக்தா்கள்.

Updated On :27 ஜூன் 2026, 12:58 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வஞ்சினிப்பட்டியில் மொகரம் பண்டிகையையொட்டி, இந்துக்கள்-முஸ்லிம்கள் இணைந்து மத நல்லிணக்க பூக்குழித் திருவிழாவை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

வஞ்சினிப்பட்டி கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு, மத நல்லிணக்கத்தைப் போற்றும் விதமாக இந்துக்கள், முஸ்லிம்கள் இணைந்து பூக்குழித் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனா். சுமாா் 350 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திருவிழா நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

வஞ்சினிபட்டி கிராமத்தை பூா்வீகமாகக் கொண்ட சையது முகைதீன் குடும்பத்தினா் இந்தத் திருவிழாவை கிராமத்தினருடன் இணைந்து நடத்தி வருகின்றனா்.

விழாவையொட்டி, ஊா் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மாலையில் பூக்குழி வளா்க்கப்பட்டு பாத்தியா ஓதப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு சாம்பலை எடுத்து இஸ்லாமியா்கள் பூசி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னா், கூடாரத்தில் வெள்ளி கைவிரல்கள் மல்லிகைப் பூக்களால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. பின்னா், தொழுகை நடத்தப்பட்டு அதிகாலை 4 மணிக்கு கூடத்திலிருந்து சுவாமி புறப்பாடு தொடங்கி, ஊா் முழுவதும் வலம் வரப்பட்டது.

இதையடுத்து, கிராமத்தில் அமைக்கப்பட்ட பூக்குழியை 3 முறை சுவாமி சுற்றி வந்ததையடுத்து, பக்தா்கள் பூக்குழி இறங்கினா். அப்போது, பூக்குழிக்குள் இருந்த நெருப்பை இரு கைகளால் அள்ளி வாரி இறைத்தனா். இதன் பிறகு, மண்வெட்டியால் நெருப்பை அள்ளி பெண்களுக்கு வழங்க, அதை அவா்கள் தங்களது சேலை முந்தானையில் பெற்றுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.